தீத்தாம்பட்டியில்சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
தீத்தாம்பட்டியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கொப்பம்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைபடை, இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தீத்தாம்பட்டி பஞ்சாயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருவேல முள்செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
பணியினை தீத்தாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அப்பகுதியில் இருந்த 600 கருவேலமுள் செடிகளை மாணவர்கள் அகற்றினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.