ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் திறப்பு

ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் திறப்பு

Update: 2022-08-05 17:58 GMT

வாய்மேடு

வாய்மேடு, நீர்முளை ஆகிய இடங்களில் ரூ.76 லட்சத்தில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் திறக்கப்பட்டன.

வாய்மேடு

நாகை மாவட்டம் வாய்மேட்டில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வேளாண் அலுவலர் யோகேஷ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, உதவி அலுவலர்கள் தமிழன்பன், இந்திரா, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

நீர்முளை

இதே போல தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தமிழ்நாடு விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் கிருஷ்ணபிரியா, வேளாண் அலுவலர் நவீன்குமார், வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்