கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-18 09:25 GMT

கடலூர்,

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை  நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மேயர் சுந்தரியின் கணவர் ராஜா, தி.மு.க நகர செயலாளராக உள்ளார். வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த சோதனை நடப்பதாக மேயரின் கணவர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்