காஞ்சிபுரத்தில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

Update: 2022-08-15 07:12 GMT

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்