சென்னையில் தென்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

நாசா கூறியது போலவே சென்னையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டது.

Update: 2024-05-10 15:15 GMT

சென்னை,

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. இது ஒரு பெரிய விண்கலமாகும். இது சீரான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி வீரர்கள் வாழவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கூடிய இடமாக இது செயல்படுகிறது.

இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இன்று இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்களுக்கு வானத்தில் தெரியும் என்றும், இதனை வெறும் கண்களால் சென்னையில் இருந்து காணலாம் என்றும் நாசா தெரிவித்தது. வெறும் கண்களால் பார்க்கும் போது இது பெரிய நட்சத்திரம் போல காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

நாசா அறிவிப்பை தொடர்ந்து, சென்னை பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாசா கூறியது போலவே சென்னையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டது. இதனை மக்கள் வெறும் கண்களால் கண்டு ரசித்தனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெரிய நட்சத்திரம் போன்று தென்பட்ட விண்வெளி ஆய்வு மையத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள்ள் வரை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்