மனோ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

Update: 2023-03-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக் கல்லூரியில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய உலக நிலவரங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச பல்துறை கருத்தரங்க மாநாடு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் நடந்தது. பாவூர்சத்திரம் செந்தூர் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்றார். பேராசிரியர் சகிலா பானு வாழ்த்தி பேசினார்.

ராஜா எம்.எல்.ஏ. கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மலேசியா நாட்டின் மஹ்சா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்டனி சாம்ராட் பேசுகையில், கொரோனா வைரஸ் எவ்வாறு உருமாற்றம் பெறுகிறது, நமது உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி எடுத்துரைத்தார். பின்னர் மலேசியா மஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் சங்கரன்கோவில் மனோ கல்லூரி இடையே பேராசிரியர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தென்கொரியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பவட், நியூயார்க் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் பிரவீன் சூசை ஆண்டனி, ஆகியோர் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் நவநீதகிருஷ்ணன், பேராசிரியர்கள் முருகையா, சந்தானகுமார், பேராசிரியர்கள் நெல்லை வழக்கறிஞர் முருகேசன், வித்யா, சாரநாதன் பாலமுருகன், லெனின் செல்வநாயகம், பால் மகேஷ், ஆனந்தகுமார், மகாலட்சுமி, நாகம்பட்டி ராம பாண்டி, உதயசங்கர், புஷ்பராணி, அருள் மனோகரி, சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்