அரசு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.

Update: 2023-06-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் உஷா தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர்கள் நேரு, பழமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் சின்னசாமி தலைமையில் சுகன்யா, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மன அமைதி ஏற்படுத்தும் யோகாசன பயிற்சியை அளித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ஷமீம், நிர்வாக அலுவலர் ஹரி, இளநிலை நிர்வாக அலுவலர்கள் வாசுதேவன், சுமதி, செவிலிய கண்காணிப்பாளர் வண்ணமுகில் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்