போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு புதிய செயலி அறிமுகம்

பொதுமக்கள் அளிக்கும் மனுவை பதிவு செய்ய போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு புதிய செயலி அறிமுகம்

Update: 2023-04-21 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும், போலீஸ் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்துகொள்ளும் வகையிலும் GRIEVANCE REDRESSAL AND TRACKING SYSTEM என்ற புதிய செயலி, அரசால் உருவாக்கப்பட்டது.

இந்த செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுவை பெற்று அதனை பதிவு செய்வது குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த செயலியின் மூலம் போலீஸ் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து விவரம் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு போலீசார், புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை, மனு ரசீது பதிவு செய்த தகவல்களின்படி சட்டப்படியான உரிய நடவடிக்கைகள், விசாரணை அதிகாரிகள் மனுதாரர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை சமர்பிப்பார்கள். இப்புதிய செயலி மூலம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது தாமதமின்றி, குறித்த காலத்திற்குள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்