கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா..? வீட்டிலேயே ரகசியமாக பாலின பரிசோதனை - வசமாக சிக்கிய கும்பல்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்ட விரோதமாக கண்டுபிடித்து கூறி வந்துள்ளனர்.;

Update:2023-03-26 20:06 IST

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நவலைகிராமத்தை சேர்ந்தவர் புஷ்பவதி. இவர் ஆரம்பகாலத்தில் பாளையம்புதூர் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தார்.

பின்னர் நல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் 7 மாதங்களாக துப்புறவு பணியாளராக வேலைபார்த்தவந்த நிலையில், கொரோனா காலத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் புஷ்பவதி, கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசன், மனோஜ் குமார், ஐயப்பன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து பல பேரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்ட விரோதமாக கண்டுபிடித்து கூறும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து மொரப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார், புஷ்பவதியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கும் கருவி வீட்டில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புஷ்பவதியை கைதுசெய்த போலீசார், மேலும் கவியரசன், மனோஜ் குமார், ஐயப்பன் ஆகிய 3 பேரையிம் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்