அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு போனது;

Update:2023-03-09 01:28 IST


வையம்பட்டியை அடுத்த தேக்கமலை கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செல்வி (வயது 33). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்த போது, கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அங்கு இருந்த 8 ½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது.. இதே போல் சேசலூரை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி (28) என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுஅரை பவுன் தங்க சங்கிலி, ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இது குறித்து தனித்தனியாக வந்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்