சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு
சிதம்பரம் அருகே வீட்டு கதவை உடைத்து நகை திருடு போனது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.;
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே பெராம்பட்டு மடத்தான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மல்லிகா (வயது 65). சம்பவத்தன்று இவரது வீட்டு கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 கிராம் நகை, 4 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடிச்சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.