தனியார் நிறுவன ஊழியரிடம் நகை-பணம் பறிப்பு

தனியார் நிறுவன ஊழியரிடம் நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2022-06-19 23:51 IST

விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி நகரை சேர்ந்தவர் சைமன் ராபர்ட் (வயது 53). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு நெல்லை- திருச்செந்தூர் சாலையில் வேளாங்கண்ணி கார்டன் டாஸ்மாக் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் சைமன் ராபர்ட்டை மிரட்டி அவர் அணிந்து இருந்த 2 தங்க மோதிரங்கள், வெள்ளிக்கொடி மற்றும் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சைமன் ராபர்ட் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்