கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில்ஓ.பி.எஸ்.அணியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணத்தில் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் நாராயணசாமி, பர்கூர் தொகுதி செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி லட்சுமணன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் தாய் சுப்பிரமணி, தவமணி ஆகியோர் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தங்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், பையூர் பெ.ரவி, சைலேஷ் கிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், ஒன்றிய இணைச் செயலாளர் சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், மாவட்ட பிரதிநிதி மஞ்சுநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.