கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை

கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது என அதிகாரி தகவல் கூறினார்.;

Update:2022-07-30 23:59 IST

கரூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் 60 காய்கறி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைக்கு கரூர் மற்றும் வாங்கல், நெரூர், மண்மங்கலம், வெள்ளியணை, காணியாளம்பட்டி, சக்கரக்கோட்டை, மாயனூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 605 டன் காய்கறிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 31 லட்சத்து 53 ஆயிரம் ஆகும். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3,307 விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளை விற்பனை செய்தனர். இதனை 1 லட்சம் நுகர்வோர்கள்வாங்கி பயன் அடைந்தனர் என உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்