முக்கிய ரெயில் வழித்தடங்களில் 'கவாச்' தொழில்நுட்பம் - தெற்கு ரெயில்வே தகவல்

'கவாச்' தொழில்நுட்பம் மூலம் ரெயில்களுக்கு இடையே ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Update: 2024-04-16 18:45 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் முக்கிய ரெயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் 'கவாச்' தானியங்கி கருவி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில், "ரெயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வடிவமைப்பு மற்றும் தரநிலை ஆராய்ச்சி அமைப்பு இணைந்து "கவாச்' தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கியது. அபாய சிக்னலை கடந்து செல்வது, அதிவேகம், மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளின் போது ரெயில் ஓட்டுனரை இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தொழில்நுட்பம் எச்சரிக்கும்.

அந்த எச்சரிக்கையின்படி, ரெயிலை ஓட்டுநார் நிறுத்தவில்லை என்றால், 'கவாச்' அமைப்பு முறையில் உள்ள பிரத்யேக அம்சங்கள் தாமாக செயல்பட்டு, ரெயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி, அதை நிறுத்தச் செய்யும். இந்த கருவி ரெயில்களுக்கு இடையே ஏற்படும் விபத்துகளை தடுக்க உதவியாக இருக்கும்.

இதோபோல, "கவாச்' முயற்சிகளை சுப்ரீம்கோர்டு பாராட்டியுள்ளது. மேலும், "ஜீரோ விபத்துகள்' என்ற இலக்கோடு முதற்கட்டமாக தெற்கு ரெயில்வே மண்டலத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயங்கும் வழித்தடம் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 271 கிலோ மீட்டருக்கு 25 ரெயில் வழித்தடங்களில் இந்த "கவாச்' அமைக்கும் பணி படிப்படியாக நடைபெற உள்ளது.

அதன்படி, சென்னை - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கடற்கரை, எழும்பூர் - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - விழுப்புரம், திருச்சி - விழுப்புரம், திருச்சி - திண்டுக்கல், மதுரை - விருதுநகர், விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி, வாஞ்சி மணியாச்சி - நெல்லை, நெல்லை - நாகர்கோவில் உள்ளிட்ட 25 வழித்தடத்தில் இந்த 'கவாச்' தொழில்நுட்பம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்