பிஸ்கட் தருவதாக அழைத்துச்சென்று சிறுமிகளிடம் சில்மிஷம்: முதியவர் கைது

சிறுமிகள் சத்தம் போட்டு அழுது கொண்டே முதியவரின் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.;

Update:2024-06-25 08:26 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). இவரது வீடு அருகே 8 மற்றும் 9 வயதுடைய 2 சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ராமசாமி அங்கு சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிகளிடம் அவர் பிஸ்கட் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

உடனே சிறுமிகள் சத்தம் போட்டு அழுது கொண்டே ராமசாமியின் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அதைத்தொடர்ந்து அவரவர் வீடுகளுக்கு சென்று வீட்டில் இருந்தவர்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த ஒரு சிறுமியின் தந்தை உடனே சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் எச்சரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்