சிறுமியை கடத்தி திருமணம்; வாலிபர் கைது

களக்காட்டில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-07 00:17 IST

களக்காடு:

சேரன்மாதேவியைச் சேர்ந்த துரை மகன் சுரேஷ் (வயது 24). இவர் கடந்த 4-ந் தேதி களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, சுரேைச கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்