கொத்தனார் மர்ம சாவு

கொத்தனார் மர்ம சாவு;

Update:2022-12-16 00:15 IST

ஸ்ரீவில்லிபுத்தூர்

வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது 51). கொத்தனார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வேலை விஷயமாக வந்தார். ராமகிருஷ்ணபுரம் அருகே ஒரு கடை முன்பு மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவரது மனைவி குருபாக்கியம், அங்கு சென்று அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குருபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொத்தனார் சுந்தரேசன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்