மாணவர்களுக்கு பாராட்டு

கராத்தே பட்டய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

Update: 2023-10-24 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் ஓகினாவான் கராத்தே பட்டய தேர்வு நடைபெற்றது. 35-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஹரிஷ்நந்தகுமார், மாரிமுத்து, ஆதீஸ்முகுந்தன் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். இவர்களுக்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் அகாடமி முதல்வர் கலைமதிகணேஷ், விஜயன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் மாஸ்டர் கணேஷ், ராம்ராஜ் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்