பூதிமுட்லு வெங்கடேஸ்வரா சாமி கோவில் கும்பாபிஷேக விழா

வேப்பனப்பள்ளி அருகே பூதிமுட்லு கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-10 19:50 GMT

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பூதிமுட்லு கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை சாமிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், கலச பூஜை, கணபதி ேஹாமம், சங்கல்பம் பூஜை, பாத்திர பூஜை, கணபதி பூஜை, வருண பூஜை, பஞ்ச கவ்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ராஜகோபுரத்துக்கு புனிதநீர் மூலம் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அந்த நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்