கடலூர் குபேர கணபதி கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் குபேர கணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

Update: 2022-12-11 18:45 GMT


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் சாலையில் கெடிலம் ஆற்றங்கரையோரம் காசி விஸ்வநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள குபேர கணபதி சன்னதியில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள், கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி இந்த சன்னதியில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக சாலை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. அதையடுத்து காலை 10 மணி அளவில் யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்களுடன் சிவாச்சாரியார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர்.

அதையடுத்து குபேர கணபதி கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்