வாணாபுரம் பகுதிகளில் ஏரிகள் நிரம்பின

தொடர் மழை காரணமாக வாணாபுரம் பகுதிகளில் ஏரிகள் நிரம்பின.;

Update:2023-09-18 22:06 IST

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்நிலைப்பகுதிகளான ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வேகமாக வருகிறது. இதனால் சில ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது.

மேலும் சில ஏரிகளுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று  இரவு தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக வாணாபுரம், மழுவம்பட்டு, சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, குங்கிலியநத்தம், தலையாம்பள்ளம், தச்சம்பட்டு சின்னஏரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் அதிகளவில் வருவதால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் நிலங்களை உழுது பயிரிட தொடங்கி உள்ளனர். மேலும் பருவத்திற்கு ஏற்ற பயிர்களாக நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எதிர்வரும் காலங்கள் மழைக்காலம் இருப்பதாலும் அதற்கு முன்னதாகவே ஏரிகளுக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்