போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது

போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-30 06:53 GMT

சென்னை ஏழுகிணறு தியாகராயபிள்ளை தெருவை சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருப்பதிய்யா என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவரிடமிருந்து 2,400 சதுர அடி நிலம் கொண்ட 2 வீட்டு மனைகளை கடந்து 2003-ம் ஆண்டு நிர்மலா வாங்கி அதை செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நிர்மலா செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று நிலத்தின் ஆவணத்தை வாங்கி பார்த்துள்ளார். அப்போது மாங்காடு அடுத்த கோவூர், அம்பாள் நகர், சாய்பாபா அவென்யூவை சேர்ந்த ராஜசேகர் (42) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நிர்மலா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சுமார் ரூ.1 கோடி 40 லட்சம் மதிப்புள்ள நிர்மலாவின் நிலத்தை மோசடி செய்த ராஜசேகரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்