கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சிலுவையை சுமந்து தவக்கால பாதயாத்திரை-ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

வால்பாறை தூய இருதய ஆலய கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து தவக்கால பாதயாத்திரையாக கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்றனர்.;

Update:2023-03-27 00:15 IST

வால்பாறை

வால்பாறை தூய இருதய ஆலய கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து தவக்கால பாதயாத்திரையாக கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்றனர்.

சிறப்பு திருப்பலி

இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் 40 நாட்கள் தவநாட்களை கிறிஸ்துவர்கள் கடந்த மாதம் பிப்ரவரி 22-ந் தேதி முதல் அனுசரித்து வருகின்றனர். இந்த நாட்களில் வால்பாறை தூய இருதய தேவாலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலியும், திவ்விய நற்கருணை ஆராதனை வழிபாடும், சிலுவைப் பாதை வழிபாடுகளையும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொண்டும் வருகின்றனர்.

தவக்கால பாதயாத்திரை

தூய இருதய ஆலய பங்கு மக்கள் நேற்று வால்பாறை பங்கு ஆலயத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் கருமலை எஸ்டேட் பகுதியில் மலைமீது அமைந்துள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்திற்கு சிலுவை சுமந்து கொண்டு தவக்கால பாதயாத்திரையாக பங்கு குரு ஜெகன் ஆண்டனி தலைமையில் சென்றனர். செல்லும் வழியில் 14 இடங்களில் ஏசுவின் சிலுவை பாடுகளை தியானித்து செபமாலை ஜெபித்து பக்தி பாடல்களை பாடிக் கொண்டு சென்றனர்.

வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்கள் கோவை பொள்ளாச்சி உட்பட பல்வேறு ஊர்களில் வந்திருந்த கத்தோலிக்க கிறித்தவர்கள் தவக்கால பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்