விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

செசன்பட்டியான் காலனி மக்களுக்கு நிரந்தர சாலை வசதி அமைத்து தரக்கோரி காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-09-12 02:04 IST

ஓமலூர்:-

செசன்பட்டியான் காலனி மக்களுக்கு நிரந்தர சாலை வசதி அமைத்து தரக்கோரி காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதாவது, செசன்பட்டியான் காலனி மக்களுக்கு நிரந்தர சாலை வசதி கேட்டு பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மதியழகன், மாவட்ட விவசாய பாதுகாப்பு இயக்க நிர்வாகி புரட்சிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் தெய்வானை போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கோஷங்கள்

மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணை செயலாளர் பாவேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜுனன், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரி ஆகியோர் பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் ஆறுமுகம் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

மாநில துணை செயலாளர்கள் வீரமணி, மணிக்குமார், முனுசாமி, பெரியசாமி, சுடரொளி, மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளர் ராஜீவ் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் விஜய், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்