#லைவ் அப்டேட்ஸ் செஸ் ஒலிம்பியாட்: வணக்கம் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2022-07-28 04:56 GMT


Delete Edit

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சென்னை வந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது

பிரதமர் மோடியை வரவேற்க குவிந்துள்ள பா.ஜ.க. தொண்டர்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடத்தில் வரையப்பட்டுள்ள 'தம்பி' அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது!

நேரு உள் விளையாட்டு அரங்கின் நிகழ்ச்சி மேடையில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடை




Live Updates
2022-07-28 12:34 GMT

 பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் சென்னை மேயர் பிரியா, டிஜிபி சைலேந்திர பாபு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்

ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் மோடியை  கவர்னர் ரவி, கனிமொழி எம்.பி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் ஆகியோர் வரவேற்கின்றனர்

2022-07-28 11:45 GMT

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல்வேறு நாட்டு செஸ் அணியின் கேப்டன்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்

2022-07-28 11:34 GMT

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்


2022-07-28 11:32 GMT

 செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் , கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

Full View

2022-07-28 10:50 GMT

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று மதியம் முதல் 87 பஸ்களில் மாமல்லபுரத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகரின் உள்ளே 8 இடங்களில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.கலை பண்பாட்டுத் துறை சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

2022-07-28 07:22 GMT

செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் விலகுவதாக வெளியான தகவல் உண்மையில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஏற்கனவே சென்னை வந்துள்ளதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2022-07-28 06:27 GMT

இந்தியாவின் முதல் இரு அணிகளும் மிக வலுவான ஈர்க்ககூடிய வீரர்களை கொண்டுள்ளது. இரு அணிகளுமே பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன் என மேக்னஸ் கார்ல்சன் (உலக செஸ் சாம்பியன்) கூறியுள்ளார். 

2022-07-28 06:08 GMT

“நம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மறக்க முடியாத தருணம்; செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்!” என 

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெர்வித்து உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்