பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

Update: 2023-09-19 19:44 GMT


ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

பெட்ரோல் நிலையம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற அதற்கான இணையதளத்தில் 18 முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் அனைவரும் வருகிற 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல்முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் ஒரு டேங்கர் தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடன் வழங்கப்படும்.

தொடர்பு கொள்ளலாம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமையக அலுவலக மாநில திட்ட மேலாளரின் 73584 89990 என்ற செல்போன் எண்ணுக்குதொடர்பு கொள்ளலாம் .

இவ்வாறு கலெக்டர் ஜெயசீலன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்