லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பொள்ளாச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-03 00:15 IST

கோட்டூர்

கோட்டூர் அருகே பெத்தநாயக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 38) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்