கருவேல மரக்காட்டில் ஆண் பிணம்

கருவேல மரக்காட்டில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.;

Update:2022-07-07 00:36 IST

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மணகெதி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் குவாரிக்கு அருகில் உள்ள கருவேல மரக்காட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ரஜினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்