ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது;
மானாமதுரை
கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி மானாமதுரையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு சிவகங்கை மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றியச் செயலாளர் துரை ராஜமணி தொடங்கி வைத்தார். தி.மு.க. மேற்கு ஒன்றியச்செயலாளர் வக்கீல் அண்ணாதுரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் தீனதயாளன், ம.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, சிற்பி சேது தியாகராஜன் உள்ளிட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் அசோக், இணையதள மண்டல பொறுப்பாளர் மருதுபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி உள்பட நிர்வாகிகள் துண்டுபிரசுரம் வினியோகித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.