சேலம் வழியாக மங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம் வழியாக மங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update:2025-12-13 05:52 IST

சேலம்,

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது கூடுதலாக தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து சேலம் வழியாக மங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி சார்லபள்ளி - மங்களூரு ஜங்ஷன் சிறப்பு ரெயில் (07267) வருகிற 24-ந் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 26-ந் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷன் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூர் ஜங்ஷன்-சார்லபள்ளி சிறப்பு ரெயில் (07268) 26-ந் தேதி மங்களூர் ஜங்ஷனில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 8.40 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.43 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 5 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும். சார்லபள்ளி- மங்களூரு சென்டிரல் சிறப்பு ரெயில் (07269) 28-ந் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.23 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 30-ந் தேதி மங்களூரு சென்ட்ரல் காலை 6.55 மணிக்கு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் மங்களூரு சென்ட்ரல்-சார்லபள்ளி சிறப்பு ரெயில் (07270) 30-ந் தேதி மங்களூரு சென்டிரலில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் மாலை 5 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்