சென்னை: காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 187 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2025-12-13 04:45 IST

சென்னை,

சென்னை போதைப்போருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23.10.2019 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் காரனோடை டோல்கேட் அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 187 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராமசிவா (வயது 30), வந்தலா முரளி (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் சிறப்பு நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமசிவா, வந்தலா முரளி ஆகிய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்