மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

அம்பையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இன்று மருத்துவ முகாம் நடக்கிறது.;

Update:2023-10-13 03:36 IST

அம்பை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்வியின் கீழ் 2023-24-ம் ஆண்டுக்கான மருத்துவ முகாம் அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (ராணி ஸ்கூல்) இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. சிறப்பு கவனம் தேவைப்படும் 18 வயது வரையுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம் நடைபெறுகிறது. இதில் புதிய அடையாள அட்டை, பஸ் பாஸ், ரெயில் பாஸ், உதவி உபகரணங்கள் ஆகியவை இதுவரை பெறாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. தகுதி உடையவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை நகலுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்