இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம்
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம் சிவகங்கையில் நடந்தது.;
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட குழு அமைப்பு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாகூர் பிச்சை மாவட்ட அமைப்பாளராகவும், சங்கரசுப்பிரமணியன் நிதிக்காப்பாளராகவும், அமைப்பு குழு உறுப்பினர்களாக மணிபாரதி, முத்து, கருப்பசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்திடவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படவும் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.