விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை

ஆனைமலையில் விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-03-03 00:15 IST

ஆனைமலை

ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 36), பால் வியாபாரி. இவருடைய மனைவி சித்ரா (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சம்பத்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சம்பத்குமாரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. கடந்த பொங்கல் பண்டிகையின்போது, சம்பத்குமார் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சம்பத்குமார் கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி, நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சம்பத்குமார், சாணி பவுடரை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்