முதலியார்குப்பம் படகு இல்லத்தில் அமைச்சர் ஆய்வு

முதலியார்குப்பம் படகு இல்லத்தில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-15 09:13 GMT

கோவளம் நீலக்கொடி கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் முதலியார்குப்பம் படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்களது மாலை பொழுதை கழிக்க நீலக்கொடி கடற்கரையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் கடலில் குளிக்க செல்லும்போது வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக குறைந்த அளவு கட்டணத்தொகை வசூலிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு செய்து தரப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்திலேயே முதன்முறையாக குப்பையில்லா நீலக்கொடி கடற்கரை என்ற தகுதியினை இந்த கடற்கரை பெற்றுள்ளது. இந்த கடற்கரையை மேம்படுத்த பல்வேறு திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 2 புதிய நீலக்கொடி கடற்கரை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்யூர் முதலியார்குப்பம் படகு இல்லத்தில் சுற்றுலா துறையின் மூலம் ரூ.50 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா இயக்குனர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சத்தீப் நத்தூரி, லத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுபலட்சுமி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்