நடைபயிற்சியின்போது உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.;

Update:2023-08-30 11:52 IST

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் உடல் நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்