மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.

Update: 2022-10-01 17:43 GMT

Minister Palanivel Thiagarajan meeting with Union Minister Nirmala Sitharamanசந்திப்பு

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றார். பின்னர் அவர் இன்று காலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய்சேத், தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

3 மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. கூட்டம் இந்த முறை மதுரையில் நடக்க உள்ளது. ஆனால் அது தாமதம் ஆவதால் அதனை உடனே நடத்த வலியுறுத்தி உள்ளேன்.

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஜைக்கா நிறுவனத்திடம் கடன் பெறுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அதைப்போல மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் வழங்கப்படும் ரூ.1 லட்சம் கோடி கடன் திட்டம் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.3,500 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் 'நைமர்' எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே எய்ம்ஸ் வர இருக்கிற நிலையில் இந்த புதிய நிறுவனம் கூடுதல் பயனாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்