வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.;

Update:2024-02-16 12:02 IST

மதுரை,

'கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம். 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 21 பேரில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி முத்துலட்சுமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 17 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்