செல்போன் தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் மோசடி

சேலத்தில் குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update:2023-05-05 02:17 IST

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் சேலம் குகை பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.5,250 கொடுத்தால் விலை உயர்ந்த செல்போன் தருவதாக கூறி உள்ளார். இதை நம்பி அவர் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் விலை உயர்ந்த செல்போன் அனுப்பவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ைண தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி நடந்திருப்பது தெரிந்தது. இது குறித்து அஜித் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்