தாய்- மகளிடம் 7½ பவுன் நகை திருட்டு

பாதாம்பால், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7½ பவுன் நகையை திருடிய மூதாட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-05-28 01:15 IST

ஆனைமலை

பாதாம்பால், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7½ பவுன் நகையை திருடிய மூதாட்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடை ஊழியர்

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த தர்மராஜா காலனி யை சேர்ந்தவர் கமலம் (வயது 70). இவர்களுடைய மகள் செல்வி (47). இவர், மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் (20).

இந்த நிலையில் செல்வி கருத்து வேறுபாடு காரணமாக கணவ ரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இவர்களது வீட்டில் கோவையை சேர்ந்த முத்தம்மாள் (50) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிவந்தார். அவர் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

7½ பவுன் நகை திருட்டு

வீட்டிற்குள் புழுக்கம் அதிகமாக இருந்ததால் கமலம், செல்வி ஆகியோர் மொட்டை மாடியில் தூங்க சென்றனர்.

அப்போது முத்தம்மாள் வந்து, நானும் உங்களுடன் தூங்குவதாக கூறி உள்ளார். பின்னர் அவர் தான் ெகாண்டு வந்த சப்பாத்தி மற்றும் பாதாம் பாலை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கமலம், செல்வி ஆகியோர் மயக்கம் அடைந்து உள்ளனர். அதை பயன்படுத்தி முத்தம்மாள், அவர்களின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க நகையை திருடி விட்டு தப்பிசென்று விட்டதாக தெரிகிறது.

வலைவீச்சு

நேற்று காலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது மொட்டை மாடியில் கமலம், செல்வி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர். முத்தம்மாள் கொடுத்த பாதாம் பால் மற்றும் சப்பாத்தியை சாப்பிட்டதால் கமலம்,செல்வி ஆகியோர் மயக்கம் அடைந்து உள்ளனர்.

அதில் எந்த வகையான மயக்க மருந்து கலக்கப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்