காதலுக்கு தடையாக இருந்த மாமியார், மருமகள் கழுத்தறுத்து கொலை - மதுரையில் இளைஞர்கள் வெறிச்செயல்

மதுரையில் மாமியார் மற்றும் மருமகளை கழுத்தறுத்து கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-08-17 18:52 IST

மதுரை,

மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர், கார் ஓட்டுனர் மணிகண்டன். இவரது மனைவி அழகுப்பிரியா. இந்த நிலையில் மணிகண்டனின் தாய் மயிலம்மாள் மற்றும் மனைவி அழகுப்பிரியா இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள பழைய பொருட்கள் சேமிக்கும் குடோன் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மயிலம்மாளின் பேரன் குணசீலன் என்பவர் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

கல்லூரியில் படிக்கும் பெண்ணை குணசீலன் காதலித்து வந்த நிலையில், அதனை பாட்டி மற்றும் அத்தை கண்டித்ததால் நண்பர் ரிஷியின் உதவியுடன் கொலை செய்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்