அம்மாவின் அரசு வேலையை சகோதரனுக்கு வழங்க கூடாது... மகள் தொடர்ந்த வழக்கு - ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

அம்மாவின் அரசு வேலையை கருணை அடிப்படையில் தன் சகோதரனுக்கு வழங்க கூடாது என தங்கை தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2023-03-04 15:10 GMT

மதுரை,

அம்மாவின் அரசு வேலையை கருணை அடிப்படையில் தன் சகோதரனுக்கு வழங்க கூடாது என தங்கை தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

திருச்சியை சேர்ந்த யோகமலர் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனால் கருணை அடிப்படையில் வாரிசு பணி கேட்டு மகன் வினோத் கண்ணா ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மகனின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு செய்ய உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து வினோத் கண்ணாவின் தங்கை மகாலட்சுமி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு வினோத் கண்ணாவுக்கு சாதகமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் கருணைப் பணி நியமனம் என்பது இறந்த அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது என்றும் இதற்கென அரசு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே கருணைப் பணி நியமனம் பெற முடியும் என்றும் கூறினர். பணியை உரிமையாக யாரும் கேட்க முடியாது என்றும் எனவே இந்த மனுவில் போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்