மோட்டார் சைக்கிள்கள் ேமாதல்; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் ேமாதல்; முதியவர் பலியானார்.;
செம்பட்டி விடுதி அருகே வடவாளம் ஊராட்சி தெற்கு ராயப்பட்டியை சேர்ந்தவா் பாண்டியன் (வயது 60). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் இச்சடியில் இருந்து ெசவிலியா் கல்லூரி அருகே ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கறம்பக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இடையபட்டியை சேர்ந்த குமாரசாமி மகன் வீரமணி (25) என்பவா் வந்து ெகாண்டிருந்தார். அப்போது இருவரது மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.