கள்ளக்குறிச்சியில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல் பள்ளி மாணவர்கள் 2 பேர் காயம்

கள்ளக்குறிச்சியில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் காயமடைந்தனர்.;

Update:2022-12-17 00:15 IST


கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வரதராஜன். ஆட்டோ டிைரவரான இவர் சம்பவத்தன்று மாலை தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி மாணவ-மாணவிகள் 5-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு துருகம் சாலை வழியாக கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதியது. இதில் பள்ளி மாணவர்களுடன் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8-ம் வகுப்பு மாணவரும், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காயமடைந்தனர். காயமடைந்த 2 பேரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு சென்றனர். ஆட்டோ டிரைவர், மற்ற மாணவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்