இசையமைப்பாளர் பரத்வாஜ் அம்பை கோர்ட்டில் ஆஜர்

இசையமைப்பாளர் பரத்வாஜ் அம்பை கோர்ட்டில் ஆஜர் ஆனார்.;

Update:2023-07-09 01:32 IST

அம்பை:

அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தாலுகா சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அம்பை கோர்ட்டில் நிலுவையில் உள்ள சிறு, குறு குற்ற வழக்குகள், விவாகரத்து வழக்கு, பேசி தீர்க்கக்கூடிய சிவில் வழக்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதேபோல் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக அவர் நேற்று அம்பை கோர்ட்டில் ஆஜரானார்.

தனது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள காலிமனையை அனுபவிக்க அரசு அதிகாரிகள் இடையூறு செய்ததாக தாக்கல் செய்த வழக்கில், அவரது மூல ஆவணங்கள் சரியாக உள்ளதால் அவரது இடத்தை அவர் அனுபவிக்க அரசுக்கு ஆட்சேபனை இல்லை என முடிவு செய்யப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. இதில் அரசு வக்கீல் மீனாட்சிநாதன், முன்னாள் அரசு வக்கீல் ராஜாங்கம் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்