கோவில்களில் நவராத்திரி திருவிழா தொடங்கியது

சிங்கம்புணரியில் உள்ள கோவில்களில் நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-26 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் உள்ள கோவில்களில் நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவராத்திரி திருவிழா

சிங்கம்புணரியில் உள்ள கோவில்களில் நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மாரியம்மன் அலங்காரத்தில் சித்தர் அருள் பாலித்தார்.சிங்கம்புணரி நாடார்பேட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொலு வைத்து வழிபாடு

சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் உள்ள அன்னை காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி முதல்நாளான நேற்று அம்மன் சாமுண்டீஸ்வரியாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இதே போல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. இதைெயாட்டி கோவில்களில் அம்மனுக்கு தினமும் ஒரு அலங்காரமும், கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் வீடுகளிலும் கொலு வைத்து பெண்கள் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்