வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி
நெல்லை தச்சநல்லூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி செய்து கையாடல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் நல்மேய்ப்பர்நகரில் வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் ரூ.1 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரம் நம்பிக்கை மோசடி செய்து கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வகுமார் மீது, மண்டல செயல்பாட்டு மேலாளர் ஹரிஹரன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.