என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடியில் போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-07-02 19:21 GMT

காரைக்குடி, 

போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி காரைக்குடியில் 9-வது பட்டாலியன் என்.சி.சி. மாணவ-மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக போதைப்பொருள் பயன்படுத்துவதால் எவ்வாறு தீங்கு ஏற்படுகிறது என்றும், இளைஞர்களை அவை எவ்வாறு சீரழிக்கிறது என்பது குறித்தும், மத்திய அரசு அறிவித்துள்ள ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டம் குறித்தும் திருச்சி என்.சி.சி.யைச் சேர்ந்த கர்னல் தீபக் விரிவாக என்.சி.சி. மாணவ-மாணவிகளிடம் பேசினார். தொடர்ந்து என்.சி.சி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வழியாக ராஜீவ்காந்தி சிலையை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட என்.சி.சி. மாணவ-மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடியே ஊர்வலம் மேற்கொண்டனர். ஊர்வலத்தில் போதைப்பொருள் மீட்பு பணியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, என்.சி.சி. அதிகாரிகள் கவிப்பிரியா, இளங்கோ, பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்