பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-10-16 01:22 GMT

பவானிசாகர்

நீலகிரி மாவட்டம் ஆடாசோலையை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 30). லாரி டிரைவர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு பழைய இரும்பு பாரத்தை ஏற்றிக்கொண்டு லாரியில் மனோஜ் குமார் புறப்பட்டார். நேற்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் அருேக வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த மனோஜ்குமார் மற்றும் அதில் இருந்த கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்